I loook at the mirror and sigh,
Caught in the whirl like a fly...
Lost in the twirl am I!
To get used to it, I ain't so spry,
And big time am I lost, oh boy!
இவனுக்கும் கோவைக்கும் சம்மந்தமே இல்லாத இடத்துக்கு வந்துடு குத்துது குடையுதுண்ணு சொல்றனேன்னு நினைக்காதீங்க. போலம்பரதுக்கு வேற இடம் இல்லாமதான் இங்க பொலம்பறேன்! வந்து ரெண்டு வாரம் ஆச்சு ஆனாலும் இன்னும் தலையும் புரியலே காலும் புரியலே... I feel like a friggin Martian lost in Manhattan! அட கடவுழே! எப்பிடி இருந்த நான், இப்பிடி ஆயிட்டேனே! இந்த நிலைமைல என்ன ஹங்கேரிக்கும் சுவிற்சர்லாந்துக்கும் அனுபறாங்க. எனக்குழ் இருக்கும் ஒப்டிமிச்ட் 'போய்ட்டு வாடா மச்சி, என்னதான் ஆகுதுன்னு பாக்கலாம்' நு சொல்லுது. ஏன் சொல்லாது?? ஏத்தி விட்டு ஏத்தி விட்டு மனுஷன முடிச்சு கட்ட யாரவது இல்லேன்னா it feels so odd!
அம்ரிதா ல இருக்கற வரகும் ஏன் டா இப்பிடி ரூல் மேலே ரூல் போட்டு சாவடிகறீங்கன்னு சண்ட போட்டேன்... இங்க வந்து 'ரூல்? அப்பிடின்ன என்னங்க? அது எந்த ஹோட்டல்லே கிடைக்குது?' ன்னு கேக்கற rangeக்கு வந்துட்டேன்! If this place has a rule book, then it's been shot to Andromeda the way these guys stepped in! இங்க வர்றதுக்கு ஒரு வாரம் முன்னால MICA Survival Kit ங்கற பேர்ல Kushwanth Singh's Jokes for 10 Year-olds range கு ஒரு மெயில் வந்தது. இது ஒரு செம தில்லாலங்கடி காம்புஸ்ன்னு அத படிக்கறப்பவே தெரியும். Not that I'm complainin much though :) another fortnight here n I ain't gonna be cribbin any more.
சுவிற்சர்லாந்து ல இருந்து திரும்பி வந்து 'தாய் மண்ணே வணக்கம்' நு scene போட்றதுக்கு முன்னாலே seniors ப்ரஜைகழ் வந்துருவாங்க. என்ன நடக்க போகுதோ... இங்க இருக்க faculty எல்லாம் செம்ம quality. That's been the high point of my sojourn here so far. ஆனா ஒரு பொண்ணு 'seniors ராக்கிங் பண்ணுவாங்களா?'ன்னு கேட்டதுக்கு ஒரு மேடம் 'சி சி அதெல்லாம் இந்த காம்புஸ் ல இருந்து ரொம்ப தூரம்'நு சொன்ன விதத்துலையே எதாவது ஒருத்தன்/ஒருத்தி சாவடிக்க போரான்னு தெரிஞ்சது. ஹ்ம்ம்ம்ம் நடப்பதுநடக்கட்டும்... Like I said before, இனிமேல் குத்துது கொடையுதுன்னு போலம்புவது height of joblessness.
இது எல்லாம் எனக்கு ok, சப்ப matter! கொஞ்ச நாழ்ழே எல்லாம் பழகி போயிடுரும். Perhaps, I'll start enjoyin it too. ஆனா பொறுக்க முடியாத விஷயம் ரெண்டு இருக்கு. ஒன்னு மேல இருக்கும் சூரியன். இந்த ஊர் மேல அவருக்கு என்ன பிரியமோதெரியல, காலைல ஏழு மணில இருந்து நைட் ஏழு மணி வரைக்கும் விடாம கொழுத்துராறு . கொஞ்சநஞ்சம் இல்ல, கொறஞ்சது நாப்பது டிகிரி கொடுக்கறாரு. நைட்ல அமெரிக்காவ கொழுதுவாருனு பாத்தா அப்பாவும் தொரத்தி தொரத்தி கொழுதுராறு. பாசக்கார பயபுழ்ழே போ! ஆனா அதுக்காக இங்க இருக்க அம்மநீங்க எல்லாம் மேனி கருத்துறும் நு இழுத்து பொத்திட்டு வராங்கன்னு மட்டும் தப்புகணக்கு போட்டுடாதீங்க. ஆல் டைம் 'என்ன கொடுமை சரவணன்' range தான்! Again, not that I'm complainin ;)
ரெண்டாவது பிரச்சனையும் மேல இருந்து தான் வருது ஆனா சூரியன் அழவுக்கு மேல இல்லே, எனக்கு மேல இருக்க floor ல இருந்து தான் வருது. எங்க ஊர்ல எல்லாம் அம்மன் கோயில் ல கூழ் ஊதரப்போ, கட்சி மாநாடு நடகரப்போ, கோவில்ல பஜனைங்கர பேர் ல எங்க ஏரியா mummies அண்ட் grannies எல்லாம் கழுதைகழுக்கு company குடுக்கறப்போ மட்டும் தான் loud speaker ல ஒப்பாரி வெப்பாங்க. ஆனா இங்க ஒருத்தன் 24X7 music ங்கற பேர்ல தொறக்கவிட்டுடறான். அப்போ அப்போ, அவனுக்கு போட்டியா இன்னும் ஒருத்தன் கச்சேரிஆரம்பிச்சிருவான். ரெண்டுக்கும் நடுவுலே நம்ம மண்டைலதான் இடி விழுகும்.
But basically எல்லாருமே intelligent தான். அந்த விஷயத்துல மட்டும் எல்லாரும்செம sharp.
Time to start off on my presentation for tom. Ta